/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/வெளியே உண்ணாவிரதம் உள்ளே உள்ளிருப்பு போராட்டம்வெளியே உண்ணாவிரதம் உள்ளே உள்ளிருப்பு போராட்டம்
வெளியே உண்ணாவிரதம் உள்ளே உள்ளிருப்பு போராட்டம்
வெளியே உண்ணாவிரதம் உள்ளே உள்ளிருப்பு போராட்டம்
வெளியே உண்ணாவிரதம் உள்ளே உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஆக 29, 2011 11:20 PM
திற்பரப்பு : அலுவலகத்தின் வெளியே உண்ணாவிரதம், உள்ளே உள்ளிருப்பு போராட்டம் என திற்பரப்பு பஞ்., அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
திற்பரப்பு பஞ்., அலுவலகத்தில் ஒதுக்கப்பட்ட பணிகளை செய்து முடிக்காததை கண்டித்து மா.கம்யூ., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதே கோரிக்கைகளுடன் காங்., - பா.ஜ., உறுப்பினர்கள் அலுவலகத்தின் உள்ளே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். திற்பரப்பு பஞ்., சிற்கு உட்பட்ட திருநந்திக்கரை பகுதியில் வியாலி பாலம் மற்றும் ரோடுகள் டெண்டர் போடப்பட்டு ஒர்க் ஆர்டர் வழங்கப்பட்ட பின்பும் நீண்ட காலமாக பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனை கண்டித்து மா.கம்யூ., கவுன்சிலர் மகேசன் 48 மணி நேர உண்ணாவிரதம் மேற்கொண்டார். இவருடன் திருநந்திக்கரை பகுதியை சேர்ந்த பச்சைமால், சுதாகரன், கிறிஸ்டின் மேரி, நாகேந்திரன் உட்பட 5 பேர் 48 மணி நேர உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் முருகேசன் போராட்டத்தை துவக்கி வைத்தார். பஞ்., கவுன்சிலர்கள் ஸ்டாலின்தாஸ், கிருஷ்ணவேணி, றோஸ்லெட் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே பஞ்., பகுதிகளில் அறிவிக்கப்பட்டு ஒர்க் ஆர்டர் வழங்கப்பட்ட பணிகளை வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், விதிமுறைகளை மீறி பணி நியமனம் செய்ய நேர்முக தேர்வு நடத்தியதற்கும், வறுமைக்கோடு பட்டியலை சரி செய்ய கேட்டும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு அதிகாரியிடம் பதில் கேட்டும் பா.ஜ., - காங்., உறுப்பினர்கள் பஞ்., அலுவலகம் வந்தனர். இந்நிலையில் காங்., சார்ந்த பஞ்., துணைத்தலைவர் ரவி, பா.ஜ., கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராஜேந்திரன், தர்மராஜ், ராஜசேகர், வினோத் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். வெளியே உண்ணாவிரதம், உள்ளே உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பஞ்., அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது. அலுவலக தேவைகளுக்காக வந்த பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் காத்திருந்தனர்.