ADDED : ஆக 03, 2011 01:04 AM
ஓசூர்: ஓசூரில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து
கொண்டார்.ஓசூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ரவி.
இவரது மனைவி ராதா (27).
இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. ராதா, கணவரை
தனது பெற்றோர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளார்.அதற்கு அவர் குழந்தை
பெற்று கொடுக்கவில்லை என கூறி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ராதா
வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துகொண்டார்.உடல்
முழுவதும் தீ பற்றி படுகாயம் அடைந்த ராதா ஓசூர் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்õர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். டவுன்
போலீஸார் விசாரிக்கின்றனர். திருமணமாகி இரு ஆண்டு மட்டும் ஆவதால்,
சப-கலெக்டர் பிரசாந்த் முகுந்த்தும் விசாரிக்கிறார்.


