/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கல்வி வாரியம் உருவாக்கநாஜிம் வேண்டுகோள்கல்வி வாரியம் உருவாக்கநாஜிம் வேண்டுகோள்
கல்வி வாரியம் உருவாக்கநாஜிம் வேண்டுகோள்
கல்வி வாரியம் உருவாக்கநாஜிம் வேண்டுகோள்
கல்வி வாரியம் உருவாக்கநாஜிம் வேண்டுகோள்
ADDED : செப் 15, 2011 04:08 AM
புதுச்சேரி:'புதுச்சேரிக்கென தனி கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும்' என,
நாஜிம் எம்.எல்.ஏ., கூறினார்.மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர்
பேசியதாவது:நமக்கென தனி கல்வி வாரியத்தை அடுத்த கல்வியாண்டு முதல்
அமல்படுத்த வேண்டும். மாநிலப் பல்கலைக் கழகம் எந்த நிலையில் உள்ளது.
இங்குள்ள பல கல்லூரிகள் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக இணைப்பு பெறவே
விரும்புகின்றன. எனவே, மாநில பல்கலைக்கழகம் துவக்குவதற்கான சாத்தியக்
கூறுகள் குறித்து ஆராய வேண்டும்.பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்
நிரப்பப்படாமல் உள்ளது. காரைக்காலில் 130 பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
காலியாக உள்ளது. ஒப்பந்த ஆசிரியர்களுக்கு சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தித்
தரப்படும் என கடந்த ஆட்சியில் கூறப்பட்டது. ஆனால், இதுவரை
தரவில்லை.தமிழகத்தைப் போல, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை வேலை வாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
காரைக்காலுக்கு பள்ளிக் கல்விக்கான இணை இயக்குனர் பதவி கேட்டிருந்தோம்.
அப்
பணியிடத்தை புதிதாக உருவாக்க ஒப்புதல் கிடைக்காததால், இங்குள்ள துணை
இயக்குனர் (பிரெஞ்ச்) பணியிடத்தை காரைக்காலுக்கு மாற்றி, அவரிடம் இணை
இயக்குனர் பதவியைத் தர வேண்டும்.அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்
ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். வேலை வாய்ப்புள்ள புதிய பாடப்பிரிவுகளை கல்லூரிகளில்
துவக்க வேண்டும். என்.ஐ.டி.,க்கு நிரந்தர கட்டடம் கட்ட நிதி ஒதுக்கியும்
நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட வில்லை. காரைக்காலில் பெண்களுக்கென தனியாக
மேல்நிலைப் பள்ளி துவக்க வேண்டும்.இவ்வாறு நாஜிம் பேசினார்.


