/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கி.கிரியில் மாதாந்திர விளையாட்டு போட்டிகி.கிரியில் மாதாந்திர விளையாட்டு போட்டி
கி.கிரியில் மாதாந்திர விளையாட்டு போட்டி
கி.கிரியில் மாதாந்திர விளையாட்டு போட்டி
கி.கிரியில் மாதாந்திர விளையாட்டு போட்டி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் 20ம் தேதி மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்தோஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவின் சார்பில் 2011 செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் வரும் 20ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் நடக்கிறது.
தடகளத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100 மீட்டர், 200,400, 800, 1500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், டிரிபுள் ஜம்ப், போல் வால்ட், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடக்கிறது. நீச்சல் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஃப்ரி ஸ்டைல் 50 மீ., 100, 200 மற்றும் 400, பேக் ஸ்டோர்க் 50 மீ., 100, 200 மீட்டர், பிரஸ் ஸ்டோர்க் 50 மீ., 100 மற்றும் 200 மீ., பட்டர்ஃபிளை 50 மீ., 100, 200 மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடக்கிறது.
போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாதாந்திர விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மூன்று மாதங்கள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் 2012 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சென்னையில் நடக்கும் மாநில போட்டிகளில் கலந்து கொள்ள அழைத்து செல்லப்படுவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


