/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/மாதர் சங்கத்தினர் மறியல் தஞ்சையில் 24 பேர் கைதுமாதர் சங்கத்தினர் மறியல் தஞ்சையில் 24 பேர் கைது
மாதர் சங்கத்தினர் மறியல் தஞ்சையில் 24 பேர் கைது
மாதர் சங்கத்தினர் மறியல் தஞ்சையில் 24 பேர் கைது
மாதர் சங்கத்தினர் மறியல் தஞ்சையில் 24 பேர் கைது
ADDED : செப் 17, 2011 01:13 AM
தஞ்சாவூர்: அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர் தலைமை போஸ்ட் ஆபீஸ் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். நகர செயலாளர் ஜானகி, ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணம், மாவட்ட அமைப்பாளர் கல்யாணி, நகர தலைவர் வளர்மதி முன்னிலை வகித்தனர். மத்திய அரசு வறுமை கோட்டுப்பட்டியலில் முன் கூட்டி அளவு நிர்ணயித்து ஏழை, எளியவர்களை அந்தப் பட்டியலில் இருந்து நீக்குவதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வறுமையில் வாடும் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை முழுமையாக அமலாக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பதிலாக பணம் கொடுக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்தும், காஸ் விலையினை ரூபாய் 800 என உயர்த்துவதை கைவிட வேண்டும். அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கண்டிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். * திருத்துறைப்பூண்டி மாதர் சங்க ஒன்றிய தலைவர் சிரோன்மணி, நகர தலைவர் வக்கீல் கோகிலா தலைமையில் நடந்தது. 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மறியலில் ஈடுப்பட்டனர்.