/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காற்றுத் திருவிழா நிறைவுசிறந்த படைப்புகளுக்கு பரிசுகாற்றுத் திருவிழா நிறைவுசிறந்த படைப்புகளுக்கு பரிசு
காற்றுத் திருவிழா நிறைவுசிறந்த படைப்புகளுக்கு பரிசு
காற்றுத் திருவிழா நிறைவுசிறந்த படைப்புகளுக்கு பரிசு
காற்றுத் திருவிழா நிறைவுசிறந்த படைப்புகளுக்கு பரிசு
ADDED : செப் 21, 2011 11:34 PM
புதுச்சேரி:காற்றுத் திருவிழாவில் இடம் பெற்ற சிறந்த படைப்புகளுக்கு சப்
கலெக்டர் முத்தம்மா பரிசு வழங்கினார்.பள்ளிக் கல்வித் துறையின் இரண்டாம்
வட்டம் அளவிலான அறிவியல் கண்காட்சி, இந்திரா நகர் அரசு துவக்கப் பள்ளியில்
நேற்று முன்தினம் துவங்கியது. 'காற்றுத் திருவிழா 2011' என்ற தலைப்பில்
நடந்த கண்காட்சியில், 2ம் வட்டத்திற்குட்பட்ட 48 பள்ளிகளைச் சேர்ந்த
துவக்கப் பள்ளி மாணவர்கள், காற்றின் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு
உருவாக்கிய மாதிரிகள் இடம் பெற்றன.
கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது. முத்துப்பிள்ளைப்பாளையம் அரசு
துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் மலரழகன் வரவேற்றார். முதன்மைக்கல்வி அலுவலர்
அனுமந்தன் தலைமை தாங்கினார்.இரண்டாம் வட்ட பள்ளித்துணை ஆய்வாளர் ஹேமாவதி,
காற்றுத் திருவிழா குறித்து தொகுத்து வழங்கினார். பள்ளித் துணை ஆய்வாளர்கள்
ஜெகசிற்பியன் கொல்பர்ட், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பார்த்தசாரதி
சிறப்புரையாற்றினார்.சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவ,
மாணவியர்களுக்கும், போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் சப்
கலெக்டர் முத்தம்மா, பரிசுகளை வழங்கி பேசினார். முருங்கப்பாக்கம் அரசு
துவக்கப் பள்ளி தலைமையாசிரியை சந்திரா நன்றி கூறினார்.