ADDED : ஜூலை 11, 2011 02:49 AM
தர்மபுரி: வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம்,
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்
கீழ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான மாவட்ட அளவிலான
விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் லில்லி தலைமையில்
நடந்தது.
கூட்டத்தில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான வழக்குகள்
குறித்தும், இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டது.மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்
ராஜேஸ்வரி, தர்மபுரி கோட்டாட்சியர் மரியம் சாதிக் மற்றும் போலீஸ் துறை
அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.