லோக்ஆயுக்தா என்றால் மிரளுகிறார் நரேந்திர மோடி:காங்கிரஸ்
லோக்ஆயுக்தா என்றால் மிரளுகிறார் நரேந்திர மோடி:காங்கிரஸ்
லோக்ஆயுக்தா என்றால் மிரளுகிறார் நரேந்திர மோடி:காங்கிரஸ்
ADDED : ஆக 18, 2011 06:55 AM
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரிக்க உடனடியாக லோக்ஆயுக்தாவை கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து குஜராத் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித்தலைவர் ஷாக்தீன்கோஹ்லி கூறியதாவது: குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாநிலத்தில் லோக்ஆயுக்தா அமைப்பை கொண்டுவர காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து , குஜராத் மாநிலத்திற்கு லோக்ஆயுக்தா அமைப்பை கொண்டுவர வலியுறுத்தி மனு கொடுத்தோம். அதனை நரேந்திர மோடி திட்டமிட்டு லோக்ஆயுக்தாவை வரவிடாமல் தடுத்துவிட்டார் ஆனால் முதல்வர் நரேந்திரமோடி அதனை தடுக்கும் முயற்சியில் உள்ளார். அவர் லோக் ஆயுக்தா என்றாலே மிரளுகிறார். லோக்ஆயுக்தா சட்டத்தின் படி ஐகோர்ட் நீதிபதி பரிந்துரையில் பேரில் நீதிபதி ஆர்.ஏ. மெகதா என்பவரை லோக்ஆயுக்தா நீதிபதியாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. முதல்வர் நரேந்திர மோடி அதனை தடுத்துவிட்டார். இந்நிலையில் முதல்வர் நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சியினர் மீதான ஊழல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளது வேடிக்கையானது என்றார்.