பயங்கரவாத நிதி ரூ.5.6 கோடி பறிமுதல்
பயங்கரவாத நிதி ரூ.5.6 கோடி பறிமுதல்
பயங்கரவாத நிதி ரூ.5.6 கோடி பறிமுதல்
ADDED : ஆக 02, 2011 11:47 PM
புதுடில்லி: 'கடந்த 2006லிருந்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட, 5.6 கோடி ரூபாய், கைப்பற்றப்பட்டுள்ளது' என, லோக்சபாவில் நேற்று மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங், நேற்று லோக்சபாவில் எழுத்து மூலமாக அளித்த பதில்: பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் நிதி மற்றும் அது தொடர்பான பரிமாற்றங்களை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போலி ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்கவும், இந்த அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேசிய புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில், இந்த பிரிவு செயல்படுகிறது. கடந்த 2006லிருந்து, இந்தாண்டு மார்ச் வரை, பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் தொடர்பாக, 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 56 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 5.6 கோடி ரூபாய், பறிமுதல் செய்யப்பட்டு, முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார புலனாய்வு அமைப்பை பலப்படுத்துவதற்காக, பல்நோக்கு பொருளாதார புலனாய்வு பள்ளி ஒன்றை அமைக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.