/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவுபணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
ADDED : ஆக 03, 2011 01:29 AM
புதுச்சேரி : பொதுப் பணித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
வணிகவரித் துறை கருத்தரங்கக் கூடத்தில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் மனோகர், கண்காணிப்புப் பொறியாளர் மாந்தையன் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் இருந்து செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பொதுப் பணித் துறையில் செயல்படுத்தப்படும் முக்கியத்துவம் வாய்ந்த பெரிய திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கடந்தாண்டில், முடிக்கப்பட்ட திட்டங்கள், செலவினங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பாக, 250 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நகர அமைப்புத் துறை செயலர் தீபக்குமார், முதன்மை நகர வடிவமைப்பாளர் துரைராஜ் உடனிருந்தனர். பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பணிகளுக்கு முன்னுரிமை தந்து விரைந்து முடிக்குமாறும், பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்.