/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அரசு கேபிள் பணி பதிவுக்கு வந்தவர்கள் வாக்குவாதம்அரசு கேபிள் பணி பதிவுக்கு வந்தவர்கள் வாக்குவாதம்
அரசு கேபிள் பணி பதிவுக்கு வந்தவர்கள் வாக்குவாதம்
அரசு கேபிள் பணி பதிவுக்கு வந்தவர்கள் வாக்குவாதம்
அரசு கேபிள் பணி பதிவுக்கு வந்தவர்கள் வாக்குவாதம்
ADDED : செப் 23, 2011 01:05 AM
விருதுநகர் : விருதுநகர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு கேபிள் டிவி பராமரிப்பு பணிக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு கேபிள் டிவி பராமரிப்பு பணிக்கு பதிவு செய்ய மாவட்டம் முழுவதுமிலிருந்து 700 பேர் வந்தனர். அரசு அனுமதித்துள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் முன் அனுபவ சான்று பெற்று பதிவு செய்ய வந்தனர். காலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததால் கூட்டத்தினை கட்டுப்படுத்தி அனுப்பினர். மதியத்திற்கு பிறகு போலீசார் இல்லாததாலும், மழை காரணமாகவும் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. பதிவிற்கு கடைசி நாள் என்பதால் வந்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்ததற்கு பின் வரிசைபடுத்தி அனைவருக்கும் பதிவு செய்யப்பட்டது.