/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/சொக்கநாதர் கோவிலில் ஆனி மாத கார்த்திகை விழாசொக்கநாதர் கோவிலில் ஆனி மாத கார்த்திகை விழா
சொக்கநாதர் கோவிலில் ஆனி மாத கார்த்திகை விழா
சொக்கநாதர் கோவிலில் ஆனி மாத கார்த்திகை விழா
சொக்கநாதர் கோவிலில் ஆனி மாத கார்த்திகை விழா
ADDED : ஜூலை 13, 2011 02:30 AM
கும்பகோணம்: திருவிடைமருதூர் சொக்கநாதர் கோவிலில் ஆனி மாத கார்த்திகை விழா நடந்தது.
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் மீனாட்சி சொக்கநாதர்கோவில் உள்ளது. இங்கு கந்தவேள் வழிபாட்டு மன்றம் சார்பில் எட்டாம் ஆண்டு ஆனி மாத கார்த்திகை விழா நடந்தது. ஞானசோமசுந்தரம், அய்யப்பன் திருமுறை பாடினர். மன்ற தலைவர் பொன்முத்தையன் தலைமை வகித்து வரவேற்றார். பேராசிரியர் பங்கயச்செல்வி அறிமுகம் செய்தார். முன்னதாக வள்ளிதெய்வானை உடனாய முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபாடுகள் நடந்தன. அபிஷேகத்திற்கு திரளானோர் பால், மஞ்சள், பழங்கள் வழங்கினர். திருப்பனந்தாள் கலைக்கல்லூரி பேராசிரியை பங்கயச்செல்வி, திருப்புகழில் நான்கு பொதுத்தலங்கள் பற்றி பேசினார். மன்றம் சார்பிலும், கவிஞர் கனகசபை சார்பிலும் பொன்னாடை அணிவித்து புத்தகம் பரிசளிக்கப்பட்டது. விழாவில், புலவர் மகாலிங்கம், வாசுதேவன், கிருத்திகா, புவனேஸ்வரி, பாலகுரு, மோகன், லட்சுமி, அய்யாதுரை, சம்பத்குமார் முதலான பலர் பங்கேற்றனர். மேலவீதி சிவப்பிரகாஷ் அன்னதானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர் பொன்முத்தையன், அய்யப்பன், சம்பத்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


