ADDED : ஆக 11, 2011 11:43 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நெடுஞ்சாலைத் துறை சார்பில், வால்பாறை சாலை, பாலக்காடு சாலை, பல்லடம் சாலை பகுதிகளில், பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
பொள்ளாச்சி அடுத்த பாலக்காடு சாலை, பல்லடம் சாலை, வால்பாறை சாலை பழுதடைந்துள்ளது; வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டதால், பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில், பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பல்லடம், வால்பாறை மற்றும் பாலக்காடு சாலையில், பராமரிப்பு மற்றும் முட்செடிகளை நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக, வால்பாறை சாலையோரம் ஜல்லி கொட்டப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வழியாக சமத்தூர் (பொன்னாச்சியூர்) வரை உள்ள சாலைக் குழிகளை சீராக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.