27 மணி நேர மணி நேர போலீஸ் காவலில் சக்சேனா
27 மணி நேர மணி நேர போலீஸ் காவலில் சக்சேனா
27 மணி நேர மணி நேர போலீஸ் காவலில் சக்சேனா
ADDED : ஜூலை 20, 2011 08:24 PM
சென்னை:'வல்லக்கோட்டை' படவிவகாரம் தொடர்பான வழக்கில் 27 மணி நேரம் மட்டும், 'சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி சக்சேனாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, சைதாப்பேட்டை கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர், 'வல்லக்கோட்டை' என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்த படத்தை, 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் வாங்கியதில் ஹன்ஸ்ராஜ் சக்சேனா, 55 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, விருகம்பாக்கம் போலீசில் ராஜா புகார் செய்தார். இவ்வழக்கு தொடர்பாக சக்சேனா, அவரது கூட்டாளி ஐயப்பன் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சக்சேனாவை, 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அரசு வழக்கறிஞர்கள், கோபிநாத், மேரி ஜெயந்தி ஆகியோர், சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில், நேற்றுமனு தாக்கல் செய்தனர்.அம்மனு மீதான விசாரணை, நடந்தது. சக்சேனாவை 27 மணி நேரம் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து விட்டு, அவரை நாளை மாலை 7 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என, மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டார்.