/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தமிழகத்தில் நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கு "பிசியோதெரபி' முகாம்கள் நடத்த உத்தரவுதமிழகத்தில் நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கு "பிசியோதெரபி' முகாம்கள் நடத்த உத்தரவு
தமிழகத்தில் நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கு "பிசியோதெரபி' முகாம்கள் நடத்த உத்தரவு
தமிழகத்தில் நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கு "பிசியோதெரபி' முகாம்கள் நடத்த உத்தரவு
தமிழகத்தில் நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கு "பிசியோதெரபி' முகாம்கள் நடத்த உத்தரவு
திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் நாளை (27ம் தேதி) அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 'பிசியோதெரபி' மருத்துவ முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டது. இம்முகாம்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் நாளை (27ம் தேதி) பிசியோதெரபி மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம் தேர்வு செய்யப்பட்டு அப்பள்ளியில் இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்தந்த கல்வி மாவட்டங்களை சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் இந்த முகாம்களில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இம்முகாம்களில் 15 பிசியோதெரபிஸ்ட்கள், 5 உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளின் உயரம், எடையை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இம்முகாம்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலர்கள் இணைந்து உரிய ஏற்பாடுகளை செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இதுசம்பந்தமாக அனைத்து பகுதிகளிலும் இன்று (26ம் தேதி) கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் பிசியோதெரபி மருத்துவ முகாம்கள் நடத்திய பின்னர் இதுசம்பந்தமாக வீடியோ, போட்டோக்களுடன் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தொகுப்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


