/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சிட்டா வழங்க கோரி விவசாயிகள்...முற்றுகை : தாலுகா அலுவலகத்தில் பதட்டம்சிட்டா வழங்க கோரி விவசாயிகள்...முற்றுகை : தாலுகா அலுவலகத்தில் பதட்டம்
சிட்டா வழங்க கோரி விவசாயிகள்...முற்றுகை : தாலுகா அலுவலகத்தில் பதட்டம்
சிட்டா வழங்க கோரி விவசாயிகள்...முற்றுகை : தாலுகா அலுவலகத்தில் பதட்டம்
சிட்டா வழங்க கோரி விவசாயிகள்...முற்றுகை : தாலுகா அலுவலகத்தில் பதட்டம்
ADDED : ஆக 29, 2011 10:15 PM
விழுப்புரம் : விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் சிட்டா வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் தெளி, விக்கிரவாண்டி, வளவனூர், கள்ளக்குறிச்சி, வளவனூர் உட்பட பல்வேறு ஊர்களில் தங்களது நிலங்களில் பயிர் வைத்துள்ள விவசாயிகள் பெரும்பாலும் வங்கியில் கடன் பெற்று வருகின்றனர். இது போன்று வங்கி கடன் பெறுவதற்கு, விவசாயிகள் வைத்துள்ள நில உரிமையாளருக்கான ஆதாரமாக சிட்டா நகலை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சிட்டா நகல் பெறுவதற்கு விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு உடனுக்குடன் சிட்டா நகல் வழங்கப்பட வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுக்கு சிட்டா நகல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்துள்ளது. இது பற்றி விவசாயிகள், உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, கணினி பழுது என்றும், ஆள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். மாவட்ட கூட்டுறவு வங்கியில் நில பயிர்களுக்கான கடன் வழங்கும் தேதி இன்றுடன் (30ம் தேதி) முடிவடைகிறது. இதனால் விரைவாக சிட்டா வழங்க கோரி விவசாயிகள் 60 பேர் நேற்று காலை 10.20 மணிக்கு விழுப்புரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த விழுப்புரம் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், இன்ஸ் பெக்டர்கள் ஜோகிந்தர், செந்தில்விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய் அதிகாரிகளிடம் பேசி சிட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால் விவசாயிகள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விழுப்புரம் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.