ஒரு ஓட்டுச் சாவடியில் 1,000 வாக்காளர்: மாநில தேர்தல் கமிஷன் நடவடிக்கை
ஒரு ஓட்டுச் சாவடியில் 1,000 வாக்காளர்: மாநில தேர்தல் கமிஷன் நடவடிக்கை
ஒரு ஓட்டுச் சாவடியில் 1,000 வாக்காளர்: மாநில தேர்தல் கமிஷன் நடவடிக்கை
ADDED : செப் 17, 2011 10:57 PM
கரூர்: 'உள்ளாட்சித் தேர்தலுக்காக, ஊரகப் பகுதிகளில் அமைக்கப்படும் ஓட்டுச் சாவடிகளில், 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக் கூடாது' என, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், அக்., 24ம் தேதியுடன் முடிகிறது.
இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்காக, தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலுக்காக, ஊரகப் பகுதிகளில் அமைக்கப்படும் ஓட்டுச் சாவடி குறித்து, மாநில தேர்தல் கமிஷன் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, ஒரு ஓட்டுச் சாவடிகளில், 1,000 வாக்காளர்களுக்கு மேலாகவும், வாக்காளர் ஓட்டுச் சாவடியைச் சென்றடைய 2 கி.மீ., பயணம் செய்யும் வகையிலும் இருக்கக் கூடாது. மத உணர்வுகளைப் பாதிக்கும் விதமாக, அல்லது சமுதாயப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கக் கூடிய இடத்திலோ, அல்லது அதன் அருகில் ஓட்டுச் சாவடி அமைக்கக் கூடாது. தற்போது, கிராம பஞ்சாயத்தில் உள்ள வார்டில், ஒரு உறுப்பினர் வார்டுகள் என, மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், 400க்கும் குறைவாக வாக்காளர்கள் இருந்தால், இரண்டு வார்டுகளுக்கு ஒரு ஓட்டுச் சாவடி அமைக்க வேண்டும். ஆனால், 1,000 வாக்காளர்களுக்கு மிகாமல் ஓட்டுச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை, மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.