Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

ADDED : ஜூலை 28, 2011 06:42 PM


Google News
ஆண்டிபட்டி: சொத்து மதிப்பு சான்று வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார் நாகராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் கொத்தாலமுத்து. இவது மகன் சரவணனின் நிலத்திற்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சொத்து மதிப்பு சான்று கேட்டு தேவையான ஆவணங்களுடன் தாசில்தார் நாகராஜனிடம்(50) விண்ணப்பித்தார். சான்றில் கையெழுத்திட ரூபாய் 6 ஆயிரம் லஞ்சமாக நாகராஜன் கேட்டுள்ளார். கொத்தாலமுத்து தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராஜ், எஸ்.ஐ.,கோதண்டராமன் தலைமையிலான போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ. 5 ஆயிரத்தை கொத்தாலமுத்துவிடம் கொடுத்தனர். கொத்தாலமுத்து தந்த பணத்தை வாங்கிய நாகராஜனை கையும் களவுமாக கைது செய்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டு தொடர் விசாரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us