Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தீபாவளிபோனஸ் உயர்த்தி வழங்க பகுதிநேர ஊழியர்கள்கோரிக்கை

தீபாவளிபோனஸ் உயர்த்தி வழங்க பகுதிநேர ஊழியர்கள்கோரிக்கை

தீபாவளிபோனஸ் உயர்த்தி வழங்க பகுதிநேர ஊழியர்கள்கோரிக்கை

தீபாவளிபோனஸ் உயர்த்தி வழங்க பகுதிநேர ஊழியர்கள்கோரிக்கை

ADDED : அக் 02, 2011 01:41 AM


Google News

புதுச்சேரி : அனைத்து அரசுத் துறை பகுதி நேர ஊழியர்கள், தினக் கூலி ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநில அனைத்துத் துறை தினக் கூலி, பகுதி நேர ஊழியர் கள் நலச் சங்கம் சார்பில் தலைவர் பாவாடைராயன், தலைமையில் நிர்வாகிகள் ராஜா, மதியழகன் உள்ளிட்டோர் முதல்வர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனு:புதுச்சேரி அனைத்து அரசுத் துறைகளிலும் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்களுக்கு, தாங்கள் ஏற்கனவே அறிவித்தவாறு தீபாவளி கருணைத் தொகையாக ரூ.500, தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1184 போனஸ் வழங்கப்பட்டது.

இன்று வரை இத் தொகையே நடைமுறை யில் உள்ளது. ஆனால், மற்ற நிரந்தர ஊழியர்களுக்கு போனஸ் உயர்த்தி வழங்கப்படுகிறது.தற்போது, விலைவாசி கடுமையாக உயர்ந் துள்ளதால், முன்பு வழங்கிய கருணைத் தொகையை கொண்டு, தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத நிலை உள் ளது. எனவே, இந்த தொகையை உயர்த்தி பகுதி நேர ஊழியர்களுக்கு ரூ.2000, தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.3000 வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us