/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நெல்லையில் பகுஜன் சமாஜ் ஆர்ப்பாட்டம்பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நெல்லையில் பகுஜன் சமாஜ் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நெல்லையில் பகுஜன் சமாஜ் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நெல்லையில் பகுஜன் சமாஜ் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நெல்லையில் பகுஜன் சமாஜ் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 28, 2011 12:43 AM
திருநெல்வேலி : பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பரமக்குடி போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்துவது, துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு, அரசுப்பணி வழங்குவது, சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது, மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சப்பாணி யாதவ், கட்டடத்தொழிலாளர் சங்க அமைப்பாளர் சிவா முன்னிலை வகித்தனர். தொழிற்சங்கத்தலைவர் பிரபு காளிதாஸ் துவக்கிவைத்தார். இளைஞரணி அமைப்பாளர் சித்தார்த் சி.வாசன், நான்குநேரி தொகுதி அமைப்பாளர் ஆனந்த், ஆலங்குளம் தொகுதி அமைப்பாளர் முருகேசன், வாசுதேவநல்லூர் தொகுதி அமைப்பாளர் பாண்டி, ரெட்டியார்பட்டி கிளைத்தலைவர் ஆறுமுகம், தாஸ், கணபதி, செல்லப்பாண்டி உட்பட பலர் பேசினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.