/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உள்ளாட்சி தேர்தலுக்கும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் உடனே பணியை துவக்க தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவுஉள்ளாட்சி தேர்தலுக்கும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் உடனே பணியை துவக்க தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
உள்ளாட்சி தேர்தலுக்கும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் உடனே பணியை துவக்க தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
உள்ளாட்சி தேர்தலுக்கும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் உடனே பணியை துவக்க தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
உள்ளாட்சி தேர்தலுக்கும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் உடனே பணியை துவக்க தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
ADDED : செப் 27, 2011 12:23 AM
தூத்துக்குடி : உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வீடு, வீடாக பூத் சிலில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணியினை உடனடியாக துவக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்று 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கலும் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தேர்தலை நியாயமான முறையில் நடத்தும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் தேர்தல் அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நன்னடத்தை விதிகளை சிறப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கடும் கண்டிப்பு செலுத்தியிருப்பதால் அதற்கு ஏற்ப விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம். கடந்த முறை தேர்தலில் வாக்காளர்கள் பிரச்னை இன்றி வாக்களிக்க பூத்சிலிப் வழங்கப்பட்டது. இதனால் அந்த சிலிப்பை காட்டி எளிதாக வாக்காளர்கள் வாக்களித்தனர். பூத் சிலிப் தேர்தலுக்கு முன்பாக இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டது.அதே போல் உள்ளாட்சி தேர்தலிலும் பூத் சிலிப் வழங்க மாநில தேர்தல் ஆணையம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் நேற்று இதற்கான தகவல் தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட்டது.உடனடியாக இந்த பணிகளை துவக்கி பூத் சிலிப் தயார் செய்யும் பணியில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பணிகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளும் நேற்று உடனே துவக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.வழக்கம் போல் தேர்தலுக்கு முன்பாக 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பாக பூத்சிலிப் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தான் உள்ளாட்சி தேர்தலுக்கும் பயன்படுத்தப்படுவதால் பூத்சிலிப்பில் வாக்காளர் போட்டோவுடன் கூடிய விபரம் அடங்கிய தகவல் அதில் இருக்கும்.புதிய வாக்காளர்களாக சேர்ந்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றால் அவர்கள் போட்டோ மட்டும் பூத் சிலிப்பில் இருக்காது. பெயர் மற்றும் முகவரிகள் இடம் பெற்றிருக்கும். பூத் சிலிப் தயாரிப்புக்கான புதிய சாப்ட்வேர் தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட உள்ளது.அதனை பயன்படுத்தி பூத் சிலிப் எல்லா மாவட்டங்களிலும் அச்சடிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியானவுடன் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி துவங்கும்.மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக்களில் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடப்பதால் அங்கு பிரச்னை இல்லை. ஊரக பகுதியில் ஓட்டு சீட்டு முறையில் தான் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓட்டு சீட்டு அச்சடிக்கப்பட உள்ளது.கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு ரோஸ் கலரில் ஆன வாக்குச்சீட்டும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு வெள்ளை மற்றும் இன்னொரு கலரில் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட உள்ளன. இந்த இரண்டும் தேர்தல் ஆணையத்தில் இருந்து அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.மாவட்ட கவுன்சிலருக்குரிய மஞ்சள் நிற வாக்குச்சீட்டு, யூனியன் கவுன்சிலருக்குரிய பச்சை நிற வாக்குச்சீட்டுகள் அந்தந்த மாவட்டங்களில் அச்சடித்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியானவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த இரண்டு வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கும் என்று கூறப்படுகிறது.கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குரிய வேட்பாளர் லிஸ்ட் சென்னைக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்து அச்சடித்து அதனை அனுப்பி வைப்பார்கள் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.