/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கெரஸின் தட்டுப்பாடு: எம்.எல்.ஏ.,விடம் முறையீடுகெரஸின் தட்டுப்பாடு: எம்.எல்.ஏ.,விடம் முறையீடு
கெரஸின் தட்டுப்பாடு: எம்.எல்.ஏ.,விடம் முறையீடு
கெரஸின் தட்டுப்பாடு: எம்.எல்.ஏ.,விடம் முறையீடு
கெரஸின் தட்டுப்பாடு: எம்.எல்.ஏ.,விடம் முறையீடு
ADDED : செப் 22, 2011 02:15 AM
காங்கேயம்: மண்ணெண்ணெய் வழங்க மறுப்பதால், எம்.எல்.ஏ., நடராஜிடம், பெண்கள்
முறையிட்டனர்.தமிழகத்தில் ஒரு காஸ் சிலிண்டர் வைத்திருந்தால், மூன்று
லிட்டர் மண்ணெண்ணெய், காஸ் இணைப்பு இல்லாத ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஐந்து
லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மத்திய அரசு மண்ணெண்ணெய் மானியத்தை
குறைத்ததால், வழக்கமாக வழங்கும் அளவை விட குறைவாகவே தமிழகத்துக்கு
அனுப்பப்படுகிறது. தாலுகாவில் உள்ள மண்ணெண்ணெய் பெறும் ரேஷன்
கார்டுதாரர்களில் 79 சதவீதம் பேருக்கு மட்டுமே மாதம்தோறும் வழங்கவும்,
மீதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடுத்த மாதம் முன்னுரிமை வழங்கி
வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.காங்கேயத்துக்கு ஐந்து மாதங்களுக்கு முன்
22 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் வந்தது. தற்போது 17 ஆயிரம் லிட்டர் மட்டுமே
வருகிறது. மாதந்தோறும் 15ம் தேதிக்குள் திருப்பூர் ரோட்டில் உழவர் சந்தை
அருகில் உள்ள பங்க்கில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
15ம் தேதிக்குள்ளேயே
17 ஆயிரம் லிட்டரும் வழங்கி முடிக்கப்படுகிறது.பங்க்குக்கு நேற்று காலை
20க்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர். பங்க்கில், 'கெரஸின் முடிந்தது அடுத்த
மாதம் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்' என, கூறி விட்டனர். அடுத்தமாதம் பெற
முன்னுரிமைக்கான டோக்கன் ஏதும் வழங்கவில்லை. இதையடுத்து, பங்க் முன்
பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸார், எம்.எல்.ஏ.,விடம்
முறையிடுமாறு பெண்களை அனுப்பி வைத்தனர்.எம்.எல்.ஏ., அலுவலகம் வந்த
பெண்கள், எம்.எல்.ஏ., நடராஜிடம் முறையிட்டனர். 'மாவட்ட வழங்கல் அலுவலரிடம்
பேசி வரும் மாதங்களில் போதுமான மண்ணெண்ணெய் வழங்கப்படும்' என எம்.எல்.ஏ.,
உறுதியளித்தார். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.