Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பம் வரவேற்பு

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பம் வரவேற்பு

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பம் வரவேற்பு

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பம் வரவேற்பு

ADDED : செப் 20, 2011 11:07 PM


Google News
சிவகங்கை: ''டேராடூன் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2012 ம் கல்வி ஆண்டில் சேர்க்கைக்கு டிசம்பரில் எழுத்து தேர்வு நடைபெறும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இக்கல்லூரியில் 2012 ம் கல்வி ஆண்டில் சேர்வதற்கு, டிச., 1 மற்றும் 2 ல் இந்தியாவில் பல மையங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னையில் மட்டுமே நடக்கும் இத்தேர்வில் ஆங்கிலம், கணக்கு, பொது அறிவு சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் 50 சதவீதம் தேர்ச்சி பெறவேண்டும். நேர்முக தேர்வில் விண்ணப்பதாரரின் அறிவு கூர்மை, தனித்தன்மை பார்க்கப்படும். இத்தேர்வில் பங்கேற்க, கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க லாம். விண்ணப்ப படிவத்தை பாரத ஸ்டேட் பாங்க் கிளை (குறியீட்டு எண்:01576)யில் பெறத்தக்க வகையில் 350 ரூபாய்க்கு 'டிடி' எடுத்து பெறலாம். விண்ணப்பதாரரின் பெற்றோர், பாதுகாப்பாளர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் அவசியம். 2012 ஜூலை 1 ல் விண்ணப்பதாரர் வயது 11.5 நிரம்பியவராகவும், 13 வயது அடையாதவராகவும் இருத்தல் அவசியம். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ, படிப்பவராகவோ இருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், எண்:1 கிரீம்ஸ் சாலை, சென்னை- 6 என்ற முகவரிக்கு செப்., 30க்குள் அனுப்பவேண்டும், என அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us