பூத் ஏஜன்ட்களை நியமிக்க கட்சியினருக்கு ஆர்வமில்லை
பூத் ஏஜன்ட்களை நியமிக்க கட்சியினருக்கு ஆர்வமில்லை
பூத் ஏஜன்ட்களை நியமிக்க கட்சியினருக்கு ஆர்வமில்லை
ADDED : செப் 17, 2011 11:01 PM
சிவகங்கை: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்,சேர்த்தல் பணிக்காக அரசியல் கட்சியினர் பூத் ஏஜன்ட்களை நியமித்து கண்காணிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தும் கட்சிகளிடையே ஆர்வமில்லாத நிலை தான் உள்ளது.
தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்குதல், தொகுதி விட்டு தொகுதி மாற்றம்,முகவரி மாற்றம் ஆகிய பணிகளின் போது சிலரது பெயர்களை நீக்கி விடுவதாக அரசியல் கட்சியினர் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்தனர். தேர்தல் அதிகாரிகள் மீது எழுந்த புகாரையடுத்து வாக்காளர்கள் பெயர் மாற்றம், நீக்கம் செய்யும் பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் கண்காணிக்கலாம் என்றும், இதற்காக தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் சார்பில் பூத் ஏஜன்ட்களை நியமித்து கொள்ளலாம் என்று தெரிவித்தது.நடந்த முடிந்த சட்டசபை தேர்தல் முடிவடைந்ததும் கட்சியினர் அதற்குரிய விண்ணப்பத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என கமிஷன் தெரிவித்திருந்தது. தேர்தல் கமிஷன் அறிவித்த பூத் ஏஜன்ட்களை நியமிக்க இதுவரை எந்த கட்சியும் முன்வரவில்லை. தேர்தல் பிரிவு அதிகாரி கூறுகையில், ''அரசியல் கட்சியினர் தேர்தல் அதிகாரிகள் தவறுதலாக வாக்காளர் பெயரை நீக்கி விடுவதாக புகார் தெரிவிக்கின்றனர். ஆனால், கமிஷன் பூத் ஏஜன்ட்களை நியமித்து கண்காணிக்கலாம் என தெரிவித்து 3 மாதங்கள் ஆன நிலையிலும் கூட எந்த கட்சியினரும் ஏஜன்ட்களை நியமிக்க ஆர்வம் காட்டவில்லை,'' என்றார்.