/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் கறவை மாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் "புகழாரம்'பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் கறவை மாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் "புகழாரம்'
பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் கறவை மாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் "புகழாரம்'
பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் கறவை மாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் "புகழாரம்'
பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் கறவை மாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் "புகழாரம்'
ADDED : செப் 17, 2011 01:11 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை யூனியன் துறையூர் பஞ்சாயத்து, சீராளூர் பஞ்சாயத்து ஆகிய இடங்களில் தமிழக அரசின் சிறப்பு திட்டங்களின் கீழ் கறவை மாடுகள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில் நூறு பயனாளிகளுக்கு கறவை மாடுகளையும், அள்ளூர் பஞ்சாயத்தில் நடந்த விழாவில் 30 பயனாளிகளுக்கு வெள்ளாடுகளையும் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கி பேசியதாவது: அண்ணாத்துரை பிறந்தநாளில் திருவள்ளூரில் சிறப்பு திட்டங்களான மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், எஸ்.எஸ்.எல்.ஸி.,, பிளஸ் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், கிராமபுற ஏழை எளியோருக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் சமூக வளர்ச்சித் திட்டமாக போற்றப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கறவை மாடு ஒன்றின் மதிப்பு ரூபாய் 30 ஆயிரம். பயனாளிகள் இடைத்தரகர் இன்றி வெளி மாநிலத்துக்கு அலுவலர்களுடன் சென்று கறவை மாடுகளை வாங்கி வந்திருக்கிறார்கள். கறவை மாடுகள் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஜெயலலிதா விருப்பபடி இரண்டாம் வெண்மை புரட்சியை ஏற்படுத்த இந்த திட்டம் முதன்øமாயாக இருக்கிறது. முதல்வர் ஒரு தாயை போல் தமிழ்நாட்டு பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக கறவை மாடுகளை வழங்கியுள்ளார்கள். இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெற்று தங்கள் குடும்பத்துக்கான வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார். கலெக்டர் பாஸ்கரன் பேசியதாவது: தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வழங்குவதுக்கான பயனாளிகள் தேர்வு கிராம சபை ஒப்புதல் பெற்று வெளிப்படையாக நடந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக பயனாளிகளே நேரடியாக சந்தைக்கு சென்று கறவை மாடுகளை தேர்வு செய்துள்ளனர். பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கறவை மாடுகளை பராமரிப்பதுக்கான வழிமுறைகள் அடங்கிய கால்நடை வளர்ப்பு கையேடு வழங்கப்பட்டுள்ளது. வாரந்÷õதறும் கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து இன விருத்தி தொடர்பான ஆலோசனை வழங்க உள்ளனர். கிராமபுறங்களில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் பொருளாதார ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கறவை மாடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலை ஆவின் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து ஒரு வாரத்துகள் பண பட்டுவாடா செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் பேசினார். தஞ்சாவூர் எம்.எல்.ஏ., ரெங்கசாமி, திருவையாறு எம்.எல்.ஏ., ரெத்தினசாமி, டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், துறையூர் பஞ்சாயத்து தலைவர் தங்கதுரை, கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் டாக்டர் சிவானந்தம், உதவி இயக்குனர் செல்லத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.