உதவி தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு
உதவி தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு
உதவி தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : செப் 10, 2011 01:50 AM
ஊட்டி :சிறுபான்மையினருக்கான தொழில் மற்றும் தொழில் நுட்ப கல்வியில்
இளங்கலை, முதுகலை கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு தகுதி மற்றும் வருவாய்
அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்
வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் சிறுபான்மையின நல அமைச்சரகம்
மூலம் வழங்கப்படும் தொழில் மற்றும் தொழில் நுட்ப கல்வியில் இளங்கலை,
முதுகலை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு தகுதி மற்றும் வருவாய்
அடிப்படையிலான கல்வி உதவித்தொகை 2011-12 ம் ஆண்டுக்கு பெறுவதற்கான புதிய
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் 30ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தீதீதீ.
ட்ணிட்ச்ண்டணிடூச்ணூண்டடிணீ.ஞ்ணிதி.டிண என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும். சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதிய கல்வி உதவித்தொகைக்கான
விண்ணப்ப படிவத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான
சான்றிதழ், உறுதிமொழி, கல்வி கட்டண விபரங்களை மாணவர்களிடம் இருந்து
அக்டோபர் 5ம் தேதிக்கு முன்பாக பெற்று பரிசீலனை செய்து உரிய விபரங்களுடன்
இணையதளம் மூலம் ஆணையர், சிறுபான்மையினர்நலம், 807, 5வது தளம், அண்ணாசாலை,
சென்னை 2 என்ற முகவரிக்கு அக்டோபர் 14ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கல்வி
கட்டணம் வங்கி விபரம் மற்றும் இதர விபரங்களை கம்ப்யூட்டரில் அப்லோட்
செய்யாத கல்வி நிலையங்கள் 10ம் தேதிக்குள் (இன்று) பதிவு செய்ய வேண்டும்.
மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சரகம் மூலம் இக்கல்வி உதவித்தொகை பெற,
'தொலை தொடர்பு தொழில்நுட்படம், பாலிமர் இன்ஜினியரிங், நேவல்
ஆர்க்கிடெக்சர், பெட்ரோலியம் இன்ஜினியரிங், நெடுஞ்சாலை இன்ஜினியரிங், பவர்
இன்ஜினியரிங்,' பாட பதிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய தொழில்
நுட்ப பாடப்பிரிவுகளுடன் ஆடை உற்பத்தி மேலாண்மை பிரிவில் படிப்பவர்கள்
குறிப்பிட்ட கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர். குறிப்பிட்ட
காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர்
அர்ச்சனாபட்நாயக் கூறியுள்ளார்.