/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/காவிரி நீரில் வாகனங்கள் கழுவும் அவலம்காவிரி நீரில் வாகனங்கள் கழுவும் அவலம்
காவிரி நீரில் வாகனங்கள் கழுவும் அவலம்
காவிரி நீரில் வாகனங்கள் கழுவும் அவலம்
காவிரி நீரில் வாகனங்கள் கழுவும் அவலம்
ADDED : செப் 04, 2011 11:02 PM
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலத்தில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து
வீணாகும் தண்ணீர் வாகனங்கள் கழுவ பயன்படுத்தப்படுகிறது.
தண்ணீரின்றி கிராம
மக்கள் தவித்து வருகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாலத்தில் உள்ள
காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை பழுது
பார்க்காததால் சமூக விரோதிகள் உடைப்பை பெரிதாக்கி வாகனங்கள் கழுவவும்,
குளிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வீணாகி செல்வதால்,
கொட்டுப்புளி, கூட்டாம்புளி, வரவணி, செங்குடி பகுதி கிராமத்தினர் தண்ணீர்
தட்டுப்பாடால் அவதிப்படுகின்றனர். ஐந்து கி.மீ., தூரத்தில் உள்ள
சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
பெரும்பாலும் குழந்தைகளே தண்ணீர் கொண்டு வருவதால் அவர்களின் படிப்பு
பாதிக்கப்படுகிறது. குடிநீர் குழாயை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியம்,
உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.