/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாகி மீனவர்களுக்கு கெரசின் வல்சராஜ் கோரிக்கைமாகி மீனவர்களுக்கு கெரசின் வல்சராஜ் கோரிக்கை
மாகி மீனவர்களுக்கு கெரசின் வல்சராஜ் கோரிக்கை
மாகி மீனவர்களுக்கு கெரசின் வல்சராஜ் கோரிக்கை
மாகி மீனவர்களுக்கு கெரசின் வல்சராஜ் கோரிக்கை
ADDED : செப் 03, 2011 01:55 AM
புதுச்சேரி : 'மாகி மீனவர்களுக்கு பயன்பாட்டுக்கு தேவையான மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்' என, வல்சராஜ் எம்.எல்.ஏ., கூறினார்.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், மாகியில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் குறைக்கப்பட்டது குறித்து வல்சராஜ் கேள்வி எ ழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, 'மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தொடர்பாக எந்த ஒதுக்கீடும் இல்லை, இருந்தபோதும், மாகி மீனவர்களுக்கு உதவும் வகையில் 25 ரூபாய் மான்யத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது' என்றார்.
வல்சராஜ் கூறும்போது, 'மோட்டார் பொருத்திய படகுகளுக்கு மண்ணெண்ணெய் தேவை என்பதால், ஒரு லிட்டரை 50 ரூபாய் அளவிற்கு வெளிமார்க்கெட்டில் இருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே, மீனவர் நலன் கருதி மண்ணெண்ணெய் வழங்கினால் நன்றாக இருக்கும்' என்று கேட்டுக் கொண்டார்.'பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும், மாகி பகுதி மீனவர்களுக்கு உதவ தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும் ' என முதல்வர் தெரிவித்தார்.