Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மின் சாதனங்கள் அடிக்கடி பழுது

மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மின் சாதனங்கள் அடிக்கடி பழுது

மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மின் சாதனங்கள் அடிக்கடி பழுது

மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மின் சாதனங்கள் அடிக்கடி பழுது

ADDED : ஆக 18, 2011 12:30 AM


Google News

கடலூர் : கடலூரில் புதிதாக திறக்கப்பட்ட மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் முறையான ஒயரிங் செய்யாததால் மின் சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகிறது.

கடலூரில் மாவட்ட போலீஸ் அலுவலகம் பழமையான கட்டடத்தில் இயங்கி வந்தது. போதிய இட வசதி இல்லாததால் பல்வேறு பிரிவு அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் இயங்கி வந்தன. இதனை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் ஆயுதப்படை மைதானம் அருகே 4.38 கோடி ரூபாய் செலவில் 3,300 சதுர அடி பரப்பளவில் ஒருங்கிணைந்த மாவட்ட போலீஸ் அலுவலகம் கட்டப்பட்டது. கடந்த மார்ச் 14ம் தேதி அப்போதைய டி.ஜி.பி., லத்திகா சரண் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இயங்கி வந்த அனைத்து பிரிவுகளும் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. மூன்றடுக்கு கொண்ட இந்த அலுவலகத்தில் பல அறைகளில் 'ஏசி', 100க்கும் மேற்பட்ட மின் விசிறிகள், கண்காணிப்பு கேமராக்கள், ஜெராக்ஸ் இயந்திரம், கம்ப்யூட்டர்கள், 'டிவி', பேக்ஸ் என மின் சாதனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக திடீர், திடீரென மின் சாதனப் பொருட்கள் பழுதடைகின்றன. சில நேரங்களில் 'டிவி', டியூப் லைட், கம்ப்யூட்டர், யூ.பி.எஸ்., உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் வெடித்து சிதறுகிறது. இதனால், ஊழியர்கள் எப்பொழுது எந்த டியூப் லைட் வெடிக்குமோ என்ற அச்சத்துடனே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், இந்த புதிய கட்டடத்தில் அதிகளவு மின் சாதனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இங்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு ஏற்ப தரமான மின் ஒயரை பயன்படுத்தாமல், சாதாரண ஒயர்களை பயன்படுத்துவதால் மின் சாதனப் பொருட்கள் வெடித்து சிதறுவதாக கூறுகின்றனர். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஒயரிங்கில் உள்ள குறைபாட்டை நீக்க வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us