பட்டய படிப்புகளுக்கு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
பட்டய படிப்புகளுக்கு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
பட்டய படிப்புகளுக்கு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
ADDED : ஆக 18, 2011 12:09 AM
சென்னை : முதுநிலை பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை,
தமிழ்நாடு டாக்டர் அம்பேக்தர் சட்ட பல்கலை நீட்டித்துள்ளது.
வணிகம்,
சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர்
நலன், மனித உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகிய துறைகளில், சட்டம் தொடர்பான
ஓராண்டு முதுநிலை பட்டயப் படிப்பை, தமிழ்நாடு டாக்டர் அம்பேக்தர் சட்ட
பல்கலை வழங்கி வருகிறது. தொலைதூர கல்வி முறையில் வழங்கப்படும் இப்பட்டய
படிப்புகளை பயில விரும்புவோர், ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை
முடித்திருக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் இப்படிப்புகளில் சேர, கடந்த
12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது
'ஓராண்டு முதுநிலை பட்டயபடிப்புகளுக்கு, வரும் 31ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலை
பதிவாளர்(பொறுப்பு) கோபால் கூறினார்.


