ADDED : ஆக 14, 2011 10:31 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட பொது நூலகத்துறை சங்க பெயர் பலகை திறப்புவிழா, குமார் நகர் மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலக வளாகத்தில் நடந்தது.அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் மாரி தலைமை வகித்தார்.
தமிழக பொது நூலக துறை அலுவலர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர்ஜெயராமன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜகோபாலன் பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.