Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்க விபரம் சேகரிப்பு

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்க விபரம் சேகரிப்பு

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்க விபரம் சேகரிப்பு

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்க விபரம் சேகரிப்பு

ADDED : ஆக 13, 2011 01:13 AM


Google News

சிவகங்கை : உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, வார்டு வாரியான விபரங்களை மாநில தேர்தல் ஆணையம் சேகரித்து வருகிறது.

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில், அக்டோபரில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடக்கும் என, நிதி அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. முதற் கட்டமாக மாவட்ட தேர்தல் அதிகாரியாக கலெக்டர், உதவி இயக்குனர் (தேர்தல்), பி.டி.ஓ., அந்தஸ்தில் தேர்தல் அலுவலர் அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.



பட்டியல் தயாரிப்பு: உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. அந்தந்த மாவட்டங்களில், கடந்த சட்டசபை தேர்தலில் உள்ள வாக்காளர் பட்டியலை வைத்து, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி வாரியாக வார்டுகளின் எண்ணிக்கை விபரங்களை தயார் செய்து, மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த விபரங்களை வைத்து, மாநில தேர்தல் ஆணையம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் வார்டு வாரியாக உள்ள வாக்காளர்களின் விபரங்களை பட்டியலாக 'வெப்சைட்டில்' வெளியிட உள்ளது. இந்த 'வெப்சைட்'டை திறந்து, அந்தந்த மாவட்டங்களில் வார்டு வாரியாக வாக்காளர்களின் பட்டியலை சேகரித்து கொள்ளலாம் என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.



உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' கிராம, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகள் வாரியாக உள்ள வார்டுகள் விபரங்களை சேகரித்து, அனுப்பி வருகிறோம். இம்மாத இறுதிக்குள் இந்த விபரங்கள் சேகரிக்கப்படும். பின், மாநில தேர்தல் ஆணையம், வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரித்து எங்களுக்கு வழங்கும். அந்த வாக்காளர் பட்டியல் படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us