ADDED : ஆக 09, 2011 02:04 AM
சேலம்:சேலம் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சேலம்
கலெக்டர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர்
ஞானசவுந்தரி தலைமை வகித்தார்.பள்ளி மாணவிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய
மதுரை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும்.
பொது
வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களை, இழிவுபடுத்திய தி.மு.க.,வினர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள்
ஆர்ப்பாட்டம் செய்தனர்.


