Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் கண் டாக்டர்கள் மாநில மாநாடு நிறைவு

நெல்லையில் கண் டாக்டர்கள் மாநில மாநாடு நிறைவு

நெல்லையில் கண் டாக்டர்கள் மாநில மாநாடு நிறைவு

நெல்லையில் கண் டாக்டர்கள் மாநில மாநாடு நிறைவு

ADDED : ஆக 08, 2011 03:45 AM


Google News
திருநெல்வேலி : நெல்லையில் கண் டாக்டர்கள் சங்க மாநில மாநாட்டில் 700 டாக்டர்கள் கலந்து கொண்டனர்.தமிழக கண் டாக்டர்கள் சங்கம், நெல்லை கண் டாக்டர்கள் சங்கம், அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில் 'நெல்லை சந்திப்பு' கண் டாக்டர்கள் மாநில மாநாடு பாளை.

பெல் பள்ளியில் கடந்த 5ம்தேதி துவங்கியது.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் துவக்கிவைத்தார். சங்கத்தலைவர் (தேர்வு) டாக்டர் கந்தையா, அமைப்புச்செயலாளர் டாக்டர் ராமகிருஷ்ணன், டாக்டர் சித்தார்த்தன், அமைப்புக்கமிட்டி புரவலர் டாக்டர் நம்பெருமாள்சாமி, அறிவியல் பாதுகாப்பு விஞ்ஞானி நடராஜன், டாக்டர்கள் வேலாயுதம், மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாடு 3 நாட்கள் நேற்று வரை நடந்தது. அமெரிக்கா, நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த டாக்டர்கள் பங்கேற்றனர்.கண் மருத்துவத்துறையின் தற்போதைய வளர்ச்சி நிலைகள், பின்பற்றப்படும் நவீன தொழில் நுட்ப முறைகள், புதிய உத்திகள், அறுவை சிகிச்சை வழிமுறைகள், புதிய உபகரணங்கள் குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். கருத்தரங்கு, படக்காட்சி நடந்தது.கண் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கண்காட்சி நடந்தது. கண் டாக்டர்கள், கண் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us