/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மானியத்துடன் பாங்க் கடன் வழங்க வலியுறுத்தி தையல் கலைஞர்கள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்மானியத்துடன் பாங்க் கடன் வழங்க வலியுறுத்தி தையல் கலைஞர்கள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
மானியத்துடன் பாங்க் கடன் வழங்க வலியுறுத்தி தையல் கலைஞர்கள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
மானியத்துடன் பாங்க் கடன் வழங்க வலியுறுத்தி தையல் கலைஞர்கள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
மானியத்துடன் பாங்க் கடன் வழங்க வலியுறுத்தி தையல் கலைஞர்கள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
ADDED : ஆக 08, 2011 03:45 AM
திருநெல்வேலி : நெல்லையில் தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் பாங்க் கடன் வழங்க வலியுறுத்தப்பட்டது.நெல்லையில் சிஐடியு., மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க ஐந்தாவது மாநாடு சிஐடியு., செயலாளர் மோகன் தலைமையில் நடந்தது.
தமிழக தையல் கலைஞர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் செல்லப்பன் பேசினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கற்பகம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் செண்பகம், சிஐடியு., மாவட்ட துணைத்தலைவர் வெங்கட்ராமன், நவஜீவன் டிரஸ்ட் இயக்குனர் நளன் சந்திரசேகர், சங்க நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில் தையல் கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.நலவாரிய பதிவு, புதுப்பித்தல் படிவங்களில் வி.ஏ.ஓ., கையெழுத்து, ஜாதிப்பெயர் கேட்பதை நிறுத்துவது, வாரிய பணப்பயன்களை உயர்த்தி காலதாமதமின்றி வழங்குவது, ஆயிரம் ரூபாய் மாத பென்ஷன் வழங்குவது, பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் பென்ஷன் அளிப்பது, இலவச மின்சாரம், தையல் மிஷின், குறைந்த வட்டியில் மானியத்துடன் பாங்க் கடன் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புதிய மாவட்டத்தலைவராக விஸ்வநாதன், பொதுச்செயலாளராக வைகுண்டமணி, பொருளாளராக வேலம்மாள், துணைத்தலைவர்களாக என்.எஸ். கணேசன், சுப்பையா, ராஜம், செல்வம், துணைச்செயலாளர்களாக கீதா, எஸ். கணேசன், பேச்சியப்பன், கோமதி, 13 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


