Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சிரஞ்சீவி காங்கிரசில் ஆடியில் முறைப்படி ஐக்கியம்

சிரஞ்சீவி காங்கிரசில் ஆடியில் முறைப்படி ஐக்கியம்

சிரஞ்சீவி காங்கிரசில் ஆடியில் முறைப்படி ஐக்கியம்

சிரஞ்சீவி காங்கிரசில் ஆடியில் முறைப்படி ஐக்கியம்

ADDED : ஆக 02, 2011 11:45 PM


Google News
Latest Tamil News

ஐதராபாத்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அழைப் பை அடுத்து, நடிகரும் பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி, வரும் 7ம் தேதி முதல் 10ம் தேதிக்குள், முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி, ஏற்கனவே, ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

ஆனால், ஆந்திராவில் தற்போது தெலுங்கானா பிரச்னை சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் முன்னிலையில், முறைப்படி பெரிய அளவில் பொதுக்கூட்டம் போட்டு, அவரால் அக்கட்சியில் சேர முடியவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா முன்னிலையில், அமைதியான முறையில் காங்கிரஸ் கட்சியில் முறைப்படி உறுப்பினராகச் சேர, சிரஞ்சீவி ஒப்புக் கொண்டார். இந்நிலையில், சிரஞ்சீவியுடன் சோனியா தொலைபேசி மூலம் நேற்று தொடர்பு கொண்டு, புதுடில்லிக்கு வரும்படி அவரை அழைத்துள்ளார். வரும் 7ம் தேதி முதல் 10ம் தேதிக்குள், புதுடில்லி செல்லும் சிரஞ்சீவி, அங்கு, சோனியாவைச் சந்தித்து, முறைப்படி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பிரஜா ராஜ்யம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைமையுடன் முறைப்படி இணைய உள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us