Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மின் சப்ளை துண்டிப்பால் பொது மக்கள் தவிப்பு

மின் சப்ளை துண்டிப்பால் பொது மக்கள் தவிப்பு

மின் சப்ளை துண்டிப்பால் பொது மக்கள் தவிப்பு

மின் சப்ளை துண்டிப்பால் பொது மக்கள் தவிப்பு

ADDED : ஜூலை 26, 2011 11:06 PM


Google News

சிவகங்கை:மின்வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பராமரிப்பு பணிகளை செய்யாததால் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்ததால் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

சிவகங்கை, காளையார் கோயில், கல்லல், கீழவாணியங்குடி, மேலவாணியங்குடி, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகள் பல மணி நேரம் இருளில் மூழ்கின. பற்றாக்குறையாக உள்ள மின்வாரிய பணியாளர்களை வைத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்வினியோகம் சீராகவில்லை.மேலவாணியங்குடியை சேர்ந்த கருப்பையா கூறுகையில்,'' 24 ம்தேதி மாலை காற்றுடன் கூடிய மழை பெய்த போது மின்தடை ஏற்பட்டது. இரண்டு நாட்கள் ஆன நிலையிலும் மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்தடையை சரி செய்ய மனமில்லை. எங்கள் பகுதியில் உள்ள மின்வாரியத்தினரிடம் பல முறை தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. உயர்அதிகாரிளிடம் தெரிவிக்கும் வகையில் அதிகாரிகளின் பெயர், மொபைல் எண்களை அந்தந்த ஊர்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்,'' என்றார்.சிவகங்கை மாரிமுத்து கூறுகையில்,'' மாதம் ஒருநாள் பராமரிப்பு பணிக்கென மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி செய்யப்படுவதாக அறிவித்த அன்றைய தினம் மின் கம்பங்களுக்கு அருகில் செல்லும் மரக்கிளைகளை வெட்டி விட வேண்டும். ஆனால் அன்றைய தினத்தில் எந்தவித பராமரிப்பு பணியும் செய்வதில்லை. காற்று அடிக்கும் நாளில் மின் கம்பங்களின் மீது மரம் விழுந்து மின்தடை செய்யப்படுகிறது,'' என்றார்.மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' ஆட்கள், தளவாட பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பணிகளை விரைந்து முடிக்க இயலவில்லை.பணியாளர் பற்றாக்குறை குறித்து பல முறை வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் பயன் இல்லை,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us