/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஏரி பிரச்னையை தீர்த்திட எஸ்.பி.,யிடம் கோரிக்கைஏரி பிரச்னையை தீர்த்திட எஸ்.பி.,யிடம் கோரிக்கை
ஏரி பிரச்னையை தீர்த்திட எஸ்.பி.,யிடம் கோரிக்கை
ஏரி பிரச்னையை தீர்த்திட எஸ்.பி.,யிடம் கோரிக்கை
ஏரி பிரச்னையை தீர்த்திட எஸ்.பி.,யிடம் கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2011 12:29 AM
விழுப்புரம் : விக்கிரவாண்டி ஒன்றியம் கப்பியாம்புலியூர் கிராமத்தில் ஏரி பிரச்னையை தீர்க்க @காரி மா.கம்யூ., கட்சியினர் எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளனர்.
விக்கிரவாண்டி ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் கிருஷ்ணமூர்த்தி விழுப்புரம் எஸ்.பி., யிடம் அளித்துள்ள மனு: விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் ஏரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. இந்த ஏரி வடகுச்சிபாளையம் எல்லையில் உள்ளதால் ஏரியில் உள்ள மீன் மகசூல், புளியமர மகசூல், மர மகசூல் அனைத்தையும் வடகுச்சிபாளையம் கிராம ஊராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு வருவாய் பஞ்சாயத்து கணக்கில் சேர்க்கப்படும்.கப்பியாம்புலியூர் ஏரியில் தனி நபர் மீன் குஞ்சுகளை விட்டுள்ளார். அங்கு குளிக்க செல்பவர்களை மீன் திருட வந்தாயா என பிடித்து போலீசில் ஒப்படைத்து பொய் வழக்கு போடும் நிலை உள்ளது.இப்பிரச்னையில் எஸ்.பி., விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.