/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கடனாக பெற்ற ரூ.2 லட்சத்தை பறிகொடுத்த கான்ட்ராக்டர்20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கடனாக பெற்ற ரூ.2 லட்சத்தை பறிகொடுத்த கான்ட்ராக்டர்
20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கடனாக பெற்ற ரூ.2 லட்சத்தை பறிகொடுத்த கான்ட்ராக்டர்
20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கடனாக பெற்ற ரூ.2 லட்சத்தை பறிகொடுத்த கான்ட்ராக்டர்
20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கடனாக பெற்ற ரூ.2 லட்சத்தை பறிகொடுத்த கான்ட்ராக்டர்
ADDED : ஜூலை 24, 2011 12:14 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் மோட் டார் சைக்கிளில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.
புதுச்சேரி திலாசுப்பேட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்,54. கான்ட்ராக்டர். இவரது மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக திலகர் நகரைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் கடன் கேட்டுள் ளார். அவர் நேற்று, ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 2 லட்சத்தை எடுத்து ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட ராஜேந்திரன், வேறு வங்கியில் டி.டி. எடுப்பதற்காக தனது வண்டி பெட்டியில் பணத்தை வைத்துக்கொண்டு புஸ்சி வீதி-எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பின் அருகில் சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்த இரண்டு பேர், 20 ரூபாய் நோட்டை கீழே போட்டு விட்டு, உங்களது பணம் கீழே கொட்டி வருகிறது என ராஜேந்திரனிடம் கூறியுள்ளனர். இதை நம்பி மோட்டார் சைக்கிளை ஓரம் கட்டி விட்டு, கீழே கிடந்த 20 ரூபாய் நோட்டை எடுத்துள்ளார். அதற்குள் மர்ம ஆசாமிகள், ராஜேந்திரனின் வண்டி பெட்டியை உடைத்து 2 லட்சம் ரூபாயை திருடிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தலைமறைவாகி விட்டனர். திரும்பி வந்து பார்த்த போது வண்டி பெட்டி உடைக்கப்பட்டு, 2 லட்சம் ரூபாய் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சம்பவ இடத்திலேயே கதறி அழுதார். இது குறித்து தகவலறிந்த ஒதியன்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.