/உள்ளூர் செய்திகள்/திருச்சி/அறிவு மேம்பாட்டினால் வேலை உருவாக்கலாம் டி.சி.எஸ்., துணைத்தலைவர் அறிவுரைஅறிவு மேம்பாட்டினால் வேலை உருவாக்கலாம் டி.சி.எஸ்., துணைத்தலைவர் அறிவுரை
அறிவு மேம்பாட்டினால் வேலை உருவாக்கலாம் டி.சி.எஸ்., துணைத்தலைவர் அறிவுரை
அறிவு மேம்பாட்டினால் வேலை உருவாக்கலாம் டி.சி.எஸ்., துணைத்தலைவர் அறிவுரை
அறிவு மேம்பாட்டினால் வேலை உருவாக்கலாம் டி.சி.எஸ்., துணைத்தலைவர் அறிவுரை
ADDED : ஜூலை 15, 2011 12:02 AM
திருச்சி: ''திறன் மேம்பாடு, அறிவு மேம்பாடாக உயரும்போது பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
திறன் இருந்தால் வேலை கிடைக்கும். அறிவு மேம்பாட்டினால் வேலைகளை உருவாக்கலாம்,'' என்று டி.சி.எஸ்., துணைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் பேசினார். திருச்சி பாரதிதாசன் பல்கலை ஐ.டி., பார்க், நாஸ்காம் மற்றும் இக்டாக்ட் சார்பில், கம்ப்யூட்டர் துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பணியாளருக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. பயிற்சியை துவக்கி வைத்து, பயிற்சி கையேட்டினை வெளியிட்டு, துணைவேந்தர் மீனா பேசியதாவது:
இப்பாடத்திட்டம் மூலம் பயிற்சி பெற 81 பேர் பதிவுச் செய்துள்ளனர். புதுகை, தஞ்சை, திருச்சி, ஒரத்தநாடு, கும்பகோணம் கல்லூரிகளில் ஆயிரம் பேருக்கு மேல் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதிதாசன் உறுப்புக்கல்லூரிகளில் 50 பேருக்கு மேல் இருந்தால், அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். தகவல் மற்றும் தொடர்புத்துறையை பொறுத்தவரை கம்ப்யூட்டர் சார்ந்த துறை மட்டுமல்லாது அனைத்துத்துறைகளிலும் விரிவாக்கப்படுவது பாரதிதாசன் பல்கலையின் குறிக்கோள். நிர்வாக பணியாளர்கள் டேட்டா எண்ட்ரிகளை அதிக நம்பிக்கையுடன் செய்யும்வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களை பொறுத்தவரை தினந்தோறும் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது குறித்து அறிந்து கொள்வது அவசியம். எந்த பாடமாக இருந்தாலும், 'பவர் பாயின்ட்', வீடியோ காட்சிகள் மூலம் மாணவருக்கு எளிதில் புரிய வைக்க முடியும். புதிய யுக்திகள் மூலம் மாணவருக்கு பாடம் கற்பிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (டி.சி.எஸ்) துணைத்தலைவர் ஜெயராம கிருஷ்ணன் பேசியதாவது: ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவருக்கு திறன்மேம்பாட்டை அதிகரிக்கும் பயிற்சி அளிப்பது முற்றிலும் புதிய முயற்சி. ஆசிரியருக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், மாணவர்களின் கல்வித்திறனை உயர்த்த வழிவகை செய்யும். தொழில்நிறுவனங்களின் யுக்திகள் அனைத்தும் பாடத்திட்டங்களுக்கு கொண்டு வர இரு துறையினரும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். ஆராய்ச்சி மூலம் ஆசிரியர் மட்டுமல்லாது தொழில்துறையினரும் பயன்பெறுவர். திறன் மேம்பாடு, அறிவு மேம்பாட்டாக உயரும்போது பல்வேறு நன்மைகள் கிடைக்கும். திறன் இருந்தால் வேலை கிடைக்கும். அறிவு மேம்பாட்டினால் வேலைகளை உருவாக்கலாம். மிக எளிதான முறையில் பயிற்சி உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் மயமாக்குவதன் மூலம் படைப்புத்திறன் அதிகமாகும். மிச்சமுள்ள நேரத்தில், நிறுவன மேம்பாட்டில் கவனம் செலுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார். 'இக்டாக்ட்' தலைமைச்செயல் அலுவலர் சிவகுமார் பேசியபோது, ''முதல்முறையாக ஒரு பல்கலையில் நிர்வாக பணியாளர்களுக்கு பலனளிக்கும் வகையில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு பேப்பர் இல்லாத அலுவலகம் நடப்பதுக்காக சாத்தியம் அதிகரிக்கப்பட்டுள்ளது,'' என்றார். 'நாஸ்காம்' மண்டல இயக்குனர் புரு÷ஷாத்தமன் பேசியபோது, ''தமிழக அரசு அனைத்து மாணவருக்கும் லேப்டாப் வழங்கப் போகிறது. எனவே, அனைத்து ஆசிரியரும் கம்ப்யூட்டர் கற்பது அவசியம். திருச்சியில், டபிள்யூ.என்.எஸ்., என்கிற சிறந்த பி.பி.ஒ., நிறுவனம், 2014ல் துவங்க உள்ளது. அவர்களுக்கு வேண்டிய மனித வளத்தை இதுபோன்ற பயிற்சியினால் மட்டுமே வழங்க முடியும்,'' என்றார்.