பாகிஸ்தானின் பயங்கரவாதம் இறுதியில் உங்களையும் வேட்டையாடும்: மேற்கு நாடுகளுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
பாகிஸ்தானின் பயங்கரவாதம் இறுதியில் உங்களையும் வேட்டையாடும்: மேற்கு நாடுகளுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
பாகிஸ்தானின் பயங்கரவாதம் இறுதியில் உங்களையும் வேட்டையாடும்: மேற்கு நாடுகளுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை

பிரஸ்ஸல்ஸ்: 'இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதம் இறுதியில் உலகின் பிற பகுதிகளையும் வேட்டையாடும். இந்தப் பிரச்சனை இந்தியா- பாகிஸ்தான் உறவுகளுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பிரச்னையாகவும், கவலையாகவும் உள்ளது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர், அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறேன். ஒசாமா பின்லேடன் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஏன் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவ நகரத்திற்கு அருகே பாதுகாப்பாக வாழ்ந்ததாக உணர்ந்தார்? உலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதம் இறுதியில் உலகின் பிற பகுதிகளையும் வேட்டையாடும். இந்தப் பிரச்னை இந்தியா- பாகிஸ்தான் உறவுகளுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பிரச்னையாகவும், கவலையாகவும் உள்ளது. அதே பயங்கரவாதம் இறுதியில் உங்களைத் துரத்த மீண்டும் வரும்.
போர் மூலமாகவோ அல்லது போர்க்களத்தில் இருந்தோ பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று இந்தியா நம்பவில்லை. அந்தத் தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை இந்தியா விரும்பவில்லை. உக்ரைனுடனும் எங்களுக்கு வலுவான உறவு உள்ளது. இது ரஷ்யாவைப் பற்றியது மட்டுமல்ல.
எங்கள் நலன்களுக்கு உதவும் ஒவ்வொரு நாடுகளுடனும் நல்ல உறவை விரும்புகிறோம். அமெரிக்க உறவு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதிபராக யார் இருந்தாலும் எங்களுக்கு பரவாயில்லை. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.