WTC பைனல்; 212 ரன்களுக்கு ஆஸி., ஆல் அவுட்... தென் ஆப்ரிக்கா மோசமான தொடக்கம்
WTC பைனல்; 212 ரன்களுக்கு ஆஸி., ஆல் அவுட்... தென் ஆப்ரிக்கா மோசமான தொடக்கம்
WTC பைனல்; 212 ரன்களுக்கு ஆஸி., ஆல் அவுட்... தென் ஆப்ரிக்கா மோசமான தொடக்கம்

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக சாம்பியன்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி மோசமான தொடக்கத்தை அமைத்துள்ளது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வை செய்தது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, எதிரணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.
ஆட்டத்தின் 7வது ஓவரை ரபாடா வீசினார். அந்த ஒரே ஓவரில் கவாஜா (0), க்ரீன் (4) ஆகியோரின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். தொடர்ந்து லபுஷக்னே(17), ஹெட் (11) ஆகியோரும் சீரான இடைவெளியில் அவுட்டாகினர். இதனால், 67 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது.
அதன்பிறகு, ஜோடி சேர்ந்த வெப்ஸ்டர் - ஸ்மித் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. ஸ்மித் 66 ரன்களில் அவுட்டானார். வெப்ஸ்டர் அரைசதம் அடித்து 72 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால், ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அபாரமாக பந்துவீசிய ரபாடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜான்சென் 3 விக்கெட்டுகளும், மகாராஜா, மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து பேட் செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் (0), ரிக்கெல்டன் (16), முல்டர் (6) ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டாகி மோசமான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 4 விக்கெட்களை இழந்து 43 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.