Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கலெக்டர் அலுவலகம் அமைக்க இடம் உறுதி செய்யும் பணி மும்முரம்

கலெக்டர் அலுவலகம் அமைக்க இடம் உறுதி செய்யும் பணி மும்முரம்

கலெக்டர் அலுவலகம் அமைக்க இடம் உறுதி செய்யும் பணி மும்முரம்

கலெக்டர் அலுவலகம் அமைக்க இடம் உறுதி செய்யும் பணி மும்முரம்

ADDED : ஜூலை 14, 2011 02:08 AM


Google News

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் உள்ளிட்ட கட்டடங்கள் அமைப்பதற்கான இடங்களை உறுதி செய்யும் இறுதிக்கட்ட பணியில், வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2009ல் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த மூன்றாண்டுகளாக, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்காக மாதம்தோறும் 10 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தப்படுகிறது.

அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைக்க இடம் தேடும் பணி நடந்தது; திருப்பூர் நகரப்பகுதியில் தேவையான அளவு இடம் கிடைக்கவில்லை. கடந்த ஆட்சியின் போது, 12 பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டது; வருவாய்த்துறை உயரதிகாரிகள் பலமுறை ஆய்வு செய்தனர். அரசியல் குறுக்கீடு இருந்ததால், இறுதி முடிவு எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போதைய அரசு, கலெக்டர் அலுவலகம் அமைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. எனவே, இடம் முடிவு செய்யும் பணி கடந்த சில நாட்களாக வெகு தீவிரமாக நடைபெறுகிறது. எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரி பின்புறம் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நல்லூரில் ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான அனைத்து கோர்ட்டுகள் மற்றும் ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மைதானம் மற்றும் அலுவலகம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பலவஞ்சிபாளையத்தில் நீதிபதிகள் மற்றும் கோர்ட் அலுவலர் குடியிருப்புகள் அமைய உள்ளன. அவிநாசி ரோடு காதி காம்ப்ளக்ஸ் பின்புறம் உள்ள கதர் வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் சர்க்யூட் ஹவுஸ் (விருந்தினர் மாளிகை), கலெக்டர், எஸ்.பி., - டி.எப்.ஓ., உள்ளிட்ட மாவட்ட முதன்மை அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் அமைக்கப்படும். அவிநாசி ரோட்டில் தற்போது வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படும் இடத்தில் எஸ்.பி., அலுவலகம், டி.எப்.ஓ., அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் அமைய உள்ளன. இவற்றை உறுதி செய்யும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த இடங்கள் குறித்த முழு விபரங்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறையிடம் தடையின்மை சான்றிதழ் உள்ளிட்டவை பெறும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியில் வருவாய்த்துறையினர் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us