/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கலந்தபனையில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்கலந்தபனையில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்
கலந்தபனையில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்
கலந்தபனையில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்
கலந்தபனையில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்
ADDED : ஜூலை 14, 2011 01:14 AM
வள்ளியூர் : வள்ளியூர் அருகே கலந்தபனையில் இலவச ரத்தவகை கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் முத்துவேலர் அமராவதி டிரஸ்ட் இணைந்து நடத்திய இலவச ரத்தவகை கண்டறியும் சிறப்பு முகாம் கலந்தபனை டி.டி.டி.ஏ.
நடுநிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பர்னபாஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜெயகுமார் வரவேற்றார். உதவி தொடக்ககல்வி அலுவலர் கிறிஸ்டோபர் முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் 70 குழந்தைகளுக்கு இலவசமாக ரத்தவகை கண்டறியப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் டாக்டர் சங்கரன், சென்டரல் ரோட்டரி சங்க செயலாளர் ஆறுமுகநயினார், பொருளாளர் முருகன், பார்வதி சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


