ADDED : ஜூலை 13, 2011 01:45 AM
மதுரை: டயர் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், ஆட்டோ மொபைல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்திற்கு முக்கியமான கனரக வாகனங்களின் டயர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இயற்கை ரப்பர் உட்பட மூலப்பொருட்களின் விலை உயர்வால் டயர் விலையும் உயர்கிறது என காரணம் கூறப்பட்டாலும், இவ்விலை உயர்வு, ஆட்டோ மொபைல் தொழிலை பாதித்துள்ளது. சென்ற மார்ச் மாதம் ஒரு ஜோடி லாரி டயர் விலை 27,800 ரூபாயாக இருந்தது. தற்போது இது 34,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், டயர் மீதான வரியையும் 12.5 சதவீதத்தில் இருந்து 14.5 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தி உள்ளதால், டயர் விலை மேலும் 700 ரூபாய் அதிகரித்துள்ளது. இது போதாது என்று வாட் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.