விசாரணைக்கு சென்ற கைதி தப்பி ஓட்டம்
விசாரணைக்கு சென்ற கைதி தப்பி ஓட்டம்
விசாரணைக்கு சென்ற கைதி தப்பி ஓட்டம்
UPDATED : ஜூலை 12, 2011 09:41 AM
ADDED : ஜூலை 12, 2011 07:26 AM
உளுந்தூர் பேட்டை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடினார்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் சையது முகமது மகன் முகமது தம்பி (22). இவர் லேப் டாப் வாங்கித்தருவதாக கூறி, சிலரிடம் பண மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக புதுவயல் எஸ்.ஐ., மோகன் தலைமையில் போலீசார் முகமது தம்பியை கைது செய்து விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். இன்று காலை உளுந்தூர் பேட்டை அருகே பாலூர் என்ற இடத்தில் சிறுநீர் கழிப்பதற்காக வண்டியை நிறுத்திய போது, போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து முகமது தம்பி தப்பி ஓடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


