Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பா.ஜ.க. அதிருப்தி எம்.பி.க்கு ‌கொலை மிரட்டல்

பா.ஜ.க. அதிருப்தி எம்.பி.க்கு ‌கொலை மிரட்டல்

பா.ஜ.க. அதிருப்தி எம்.பி.க்கு ‌கொலை மிரட்டல்

பா.ஜ.க. அதிருப்தி எம்.பி.க்கு ‌கொலை மிரட்டல்

UPDATED : ஜூலை 12, 2011 09:13 AMADDED : ஜூலை 12, 2011 03:00 AM


Google News

சிம்லா: ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜ.

கட்சியின் ஆட்சியின் ஊழல் குறித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அதிருப்தி எம்.பி. ராஜன் சுஷ்காந்த் புகார் தெரிவித்துள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பிரேம்குமார் துமால் பதவி வகித்து வருகிறார். பா.ஜ.க.வைச் சேர்ந்த லோக்சபா எம்.பி. ராஜன்சுஷ்காந்த் என்பவர், துமாலின் அமைச்சரவையில் நடைபெற்றுவரும் ஊழல்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். அதில் கடந்த 1998-ம் ஆண்டு முதல்வராக இருந்த துமால் உள்ளிட்ட அமைச்சர்கள் ஊழல் செய்தனர். அவர்களை உண்மை கண்டறியும் சோத‌னை மூலம் விசாரிக்க வேண்டும் என்றார். இதனால் கடந்த மே மாதம் பா.ஜ.க.விலிந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பா.ஜ. எம.பி. நேற்று முன்தினம் ஜவாலி போலீசில் நிலையத்தில் அளித்துள்ள மனுவில், ஹிமாச்சல் பிரதேசத்தில் கங்ரா மாவட்டம் ‌பதேபூர் நகரில் வசித்து வருகிறேன், ஆளும் பா.ஜ.வுக்கு எதிராக ஊழல் பிரசாரம் செய்து வருகிறேன். எனவே சில அரசு நிர்வாகத்தினர், மற்றும் பா.ஜ.கட்சியைச் சேர்ந்தவர்களால் தனது உயிருக்கு ஆபத்து நேரலாம், ஏற்கனவே எனக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல்கள் வந்துள்ளன. எனவே எனக்கு இந்த அரசும்,போலீசாரும் உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியுள்ளார். இது குறித்து முதல்வர் பிரேம்குமார் துமால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக தாம் கருத்து தெரிவிக்கப்போவதில்லை என கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us