/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீருடன் உள்ளூர் நீராதார நீர் கலந்து வினியோகம்: அதிருப்திகூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீருடன் உள்ளூர் நீராதார நீர் கலந்து வினியோகம்: அதிருப்தி
கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீருடன் உள்ளூர் நீராதார நீர் கலந்து வினியோகம்: அதிருப்தி
கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீருடன் உள்ளூர் நீராதார நீர் கலந்து வினியோகம்: அதிருப்தி
கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீருடன் உள்ளூர் நீராதார நீர் கலந்து வினியோகம்: அதிருப்தி
ADDED : ஜூலை 11, 2011 09:25 PM
உடுமலை : கூட்டுக்குடிநீர் திட்டங்களில் பற்றாக்குறை வினியோகம் இருப்பதால்,
உள்ளூர் நீராதாரத்திலிருந்து பெறப்படும் தண்ணீரை கூட்டுக்குடிநீர்
தண்ணீருடன் கலந்து கிராமங்களில் குடிநீராக வினியோகிக்கப்படுகிறது.
இதனால்,
மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் நிலை உள்ளது. குடிமங்கலம்
ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில், நிலத்தடி நீர் மட்டம்
குறைவாகவும், உவர்ப்பாகவும் உள்ளது. கிராமங்களில் கிடைக்கும் நிலத்தடி
நீரில் புளுரைடு உட்பட வேதித்தன்மைகள் நிறைந்ததாக உள்ளது. இந்த தண்ணீரை
குடிநீராக பயன்படுத்துவதால் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க
கூட்டுக்குடிநீர் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.தாமரைப்பாடி திட்டம் அமராவதி ஆற்றிலிருந்தும், அம்பராம்பாளையம்
திட்டம் ஆழியாற்றிலிருந்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,
கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் நோக்கத்தை வீணடிக்கும்
வகையில், சில ஊராட்சி நிர்வாகத்தினர் செயல்பட்டு
வருகின்றனர்.கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீரை தேக்கி வைக்கும்
மேல்நிலைத்தொட்டிகளில் போர்வெல் தண்ணீர் கலக்கப்பட்டு மக்களுக்கு
வினியோகிக்கப்படுகிறது. இதனால், குடிநீரின் சுவை மற்றும் அடிப்படை தன்மைகள்
மாறுபடுகிறது. உவர்ப்பான வேதித்தன்மை மிகுந்த போர்வெல் தண்ணீரை
கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீருடன் கலப்பதால், மக்களுக்கு பல்வேறு நோய்கள்
ஏற்படும் நிலையும் உள்ளது.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில்,
கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வரும் தண்ணீரை பொதுக்குழாய்களில்
குடிநீருக்கு மட்டும் பயன்படுத்தும் அளவிற்கு மட்டுமே வினியோகிக்க
வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் வீட்டு இணைப்புகளுக்கும்
கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீரை வழங்கும் முறையை கைவிட வேண்டும்.ஊராட்சி
நிர்வாகத்தினர் கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீரை போர்வெல் தண்ணீருடன் கலந்து
வினியோகிக்காமல் தனியாக மேல்நிலைத்தொட்டிகளில் தேக்கி பொதுமக்களுக்கு
வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.இந்த நடைமுறை பெரும்பாலான
ஊராட்சிகளில் பின்பற்றப்படுவதில்லை. ஊராட்சி நிர்வாகிகள் தரப்பில்,
கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இணைப்பு வழங்கப்பட்டதிலிருந்து பொதுமக்கள்
உள்ளூர் போர்வெல் நீரை பயன்படுத்த தயங்குகின்றனர்.கூட்டுக்குடிநீர்
திட்டங்களில் போதுமான வினியோகம் இருப்பதில்லை. இதனால், தட்டுப்பாட்டை
தவிர்க்க தண்ணீரை கலந்து வினியோகிக்க வேண்டி உள்ளது. சீராக
கூட்டுக்குடிநீர் கிடைக்க நீர் உந்து நிலையங்கள் அதிகரிக்க வேண்டும்', என
தெரிவித்தனர்.பிரச்னைக்கு உடனடி தீர்வு காணவிட்டால், குடிநீரை
பயன்படுத்தும் மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள்
பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை
எழுந்துள்ளது.