நாங்களும் பாத்துட்டே தான் இருக்கிறோம்: வங்கதேச விவகாரத்தில் வாய் திறந்தது ஐ.நா.,
நாங்களும் பாத்துட்டே தான் இருக்கிறோம்: வங்கதேச விவகாரத்தில் வாய் திறந்தது ஐ.நா.,
நாங்களும் பாத்துட்டே தான் இருக்கிறோம்: வங்கதேச விவகாரத்தில் வாய் திறந்தது ஐ.நா.,

உன்னிப்பாக கவனிக்கிறோம்
இது குறித்து ஐ.நா.,பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரசின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறி இருப்பதாவது: தெற்காசிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலையும், அங்கு நிலவும் பதற்றத்தையும், அரசியல் நெருக்கடியையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
நாங்க இருக்கோம்: அமெரிக்கா ஆதரவு
'வங்கதேச மக்களுக்கு ஆதரவாக இருப்போம். வன்முறையை தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம்' என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார். தற்போதைய வங்கதேச நிலைமை குறித்து, அவர் கூறியதாவது:
வன்முறை வேண்டாம்...!
பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறியதாக அறிவித்ததை நாங்கள் பார்த்தோம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வங்கதேச மக்களுக்கு ஆதரவாக இருப்போம். வன்முறையை தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம். கடந்த பல வாரங்களாக நடந்த வன்முறையால் பலர் உயிரிழந்தனர்.
வருத்தமாக இருக்குது...!
வரும் நாட்களில், மக்கள் அனைவரும் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். இடைக்கால அரசு அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதை, நாங்கள் வரவேற்கிறோம். கடந்த வாரங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் பற்றிய தகவல்களை கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.