Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அரசு ஊழியர்களை கடத்தி மிரட்டல்:சங்கராபுரம் பா.ம.க., வேட்பாளர் கைது

அரசு ஊழியர்களை கடத்தி மிரட்டல்:சங்கராபுரம் பா.ம.க., வேட்பாளர் கைது

அரசு ஊழியர்களை கடத்தி மிரட்டல்:சங்கராபுரம் பா.ம.க., வேட்பாளர் கைது

அரசு ஊழியர்களை கடத்தி மிரட்டல்:சங்கராபுரம் பா.ம.க., வேட்பாளர் கைது

ADDED : அக் 02, 2011 12:45 AM


Google News

சங்கராபுரம்:பொதுப்பணித் துறை ஊழியர்களை காரில் கடத்திச் சென்று, கொலை மிரட்டல் விடுத்த பா.ம.க., வேட்பாளரை, போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் நாராயணசாமி மகன் பப்லு; பா.ம.க., நகரச் செயலர்.

இவர், கட்சி சார்பில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு, மனு தாக்கல் செய்துள்ளார்.இவரது சகோதரர் குணசேகரன், தி.மு.க., பிரமுகர். இவர்கள் அரசு அனுமதியின்றி, டிராக்டர்களில் ஆற்றில் மணல் எடுத்து, சங்கராபுரம் அடுத்த வடசேமபாளையத்தில், விற்பனைக்காக சேகரித்து வைத்திருந்தனர்.தகவலறிந்த சங்கராபுரம் தாசில்தார் கோகுல பத்மநாபன் மற்றும் வருவாய் துறையினர், நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர்.



அனுமதியின்றி வைத்திருந்த, 50 யூனிட் மணலை கைப்பற்றி, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.பொதுப்பணித் துறை அலுவலக உதவியாளர் இளங்கோ,40, உதவியாளர் அய்யப்பன் ஆகியோர், மணலை எடுத்துச் செல்ல, நேற்று முன்தினம் மாலை வடசேமபாளையத்திற்கு, டிராக்டர், பொக்லைன் சகிதமாகச் சென்றனர்.அப்போது, பப்லு, அவரது சகோதரர்கள் ரவி, குணசேகரன் மற்றும் 20 பேர் கொண்ட கும்பல், மணலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.பொதுப்பணித் துறை ஊழியர்களைத் தடுத்துத் தாக்கியதுடன், இருவரையும் காரில் கடத்திச் சென்று, பல மணி நேரத்திற்குப் பின் சங்கராபுரத்தில் இறக்கி விட்டனர். நடந்த சம்பவம் பற்றி வெளியில் சொன்னால், குடும்பத்தை கூண்டோடு அழித்துவிடுவோம் என்று, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.



இளங்கோ கொடுத்த புகாரின்படி, சங்கராபுரம் பேருராட்சி வேட்பாளரான நகர பா.ம.க. செயலர் பப்லு, அவரது சகோதரர் தி.மு.க., பிரமுகர் குணசேகரன் ஆகியோரை, போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.இருவரையும், சங்கராபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதன்பேரில், கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us